துணை ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025

துணை ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் சுதர்சன் ரெட்டி


சுதர்சன் ரெட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னை வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் காலை 10.30 மணியளவில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது, துணை ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க. எம்.பி.க்கள் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சுதர்சன் ரெட்டி வேண்டுகோள் விடுக்க உள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடான சந்திப்புக்கு பின்னர் சுதர்சன் ரெட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஓய்வு எடுக்க உள்ளார்.


Update: 2025-08-24 04:00 GMT

Linked news