நைஜீரியா: ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 35... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
நைஜீரியா: ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் பலி
நாட்டின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் போகோஹரம் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு அந்நாட்டின் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தியது.
கேமரூன் நாட்டுக்கு அருகே கும்ஷே பகுதியில் 4 இடங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில். 35 பேர் உயிரிழந்து உள்ளனர் என நைஜீரிய விமான படையின் செய்தி தொடர்பாளர் எஹிமென் எஜோடேம் கூறினார்.
நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு தலைமையிலான அரசு, பயங்கரவாதிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதுடன் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Update: 2025-08-24 05:16 GMT