துணை ஜனாதிபதி தேர்தல்: சென்னை வந்தார் ‘இந்தியா’... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025

துணை ஜனாதிபதி தேர்தல்: சென்னை வந்தார் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி


துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா' கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.

2 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று தங்களது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து எம்.பி.க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ‘இந்தியா' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டில் இருந்து தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் சென்னை வந்தடைந்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, துணை ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க. எம்.பி.க்கள் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சுதர்சன் ரெட்டி வேண்டுகோள் விடுக்க உள்ளார்.

Update: 2025-08-24 07:16 GMT

Linked news