உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வருகிறார்
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கியின் பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா வரும் உக்ரைன் அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்துவார் என்றும் அப்போது போர் நிலவரம், போரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபரின் இந்திய பயணம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ரஷியா மற்றும் உக்ரைனுக்கு பயணம் செய்த பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இரு நாட்டு தலைவர்களிடமும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-08-24 08:21 GMT