“மோடிபோலதான் விஜய்” - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

“மோடிபோலதான் விஜய்” - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


சென்னை,

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு மக்களுக்கு பயன்தரும் என்கிறார்கள். ஆனால், இந்த வரியை விதித்தது யார்? இது சுமையாக இருந்ததை இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். எனில் உங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேளுங்கள். மக்களுக்கு சுமையாக இருக்கிறது என தெரிந்தும் வரியை விதித்த நீங்கள் என்ன தலைமையாளர்கள்?.. தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீதம், குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் வரி விதிக்கிறீர்கள். இந்த நாட்டில் பிறந்ததை தவிர்த்து நாங்கள் வேறு என்ன பிழை செய்தோம்?.

நான் விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது, ஒரு அண்ணனாக தம்பிக்கு அறிவுரைகளை சொல்கிறேன். இப்போது சரி செய்து கொள்ளவில்லை என்றால் வேறு அரசியல் கட்சிகள் எடுத்துச்சொல்லுவார்கள்.

சின்னப்பிள்ளைங்க பக்குவப்பட வேண்டும். பொதுவெளியில் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துதான் ஆக வேண்டும். கேள்வி கேட்டாலே இப்படி சொல்லலாமா?. தவெக தொண்டர்கள் எனது தம்பி தங்கைகள். தவெகவினர் விமர்சிப்பதைப் பார்த்து ரசித்துவிட்டு செல்ல வேண்டியது தான். பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் கொள்கை வித்தியாசம் என்ன? கொள்கை வேறு, அரசியல் வேறு கிடையாது கொள்கைதான் அரசியல் . பாஜக உங்கள் கொள்கை எதிரி என்றால் காங்கிரஸ் உங்கள் கொள்கை நண்பனா?

மோடி எப்படி தமிழ் பேசுகிறாரோ, எப்படி திருக்குறள் பற்றி பேசுகிறாரோ, அதுபோலதான் மீனவர்கள் மீதான விஜயின் அக்கறை

இவ்வாறு அவர் கூறினார். 

Update: 2025-09-24 07:27 GMT

Linked news