கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025

கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியில், அன்புக்கும் பொறுமைக்கும் கருணைக்கும் உலகம் முழுக்க அடையாளமாகத் திகழும் இயேசுநாதர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக அரசு என்றுமே சிறுபான்மையின மக்களின் உண்மைத் தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் இருக்கும். அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படிதான் என்றுமே இந்த ஆட்சி தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Update: 2025-12-24 11:25 GMT

Linked news