இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் அருகே ஆபத்தான முறையில் ஒரே பைக்கில் 5 இளைஞர்கள் பயணம் செய்தனர். இது தொடர்பாக வழக்குபதிந்துள்ள போலீசார், 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
கன்னியாகுமரியில் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை காங்கிரஸ் நிர்வாகி பினுலால் சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. இவ்விழாவில் தவெக நிர்வாகிகள் பங்கேற்றதால், குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்-க்கள் புறக்கணித்ததாக சொல்லப்பட்டது.
எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்ற காங். கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அங்கு வந்த ஓபிஎஸ் மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் நலம் விசாரித்தார்.
எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினார் தவெக நிர்வாகி செங்கோட்டையன்.
நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம் .
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் இருக்கும் பகுதிக்கு செல்லக்கூடாது, பாதிக்கப்பட்டவரையோ அவரின் தாயையோ அச்சுறுத்த கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமினும் வழங்கியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழகத்தையே புருவம் உயர செய்துள்ளது.
கிறிஸ்துமஸ் நாளில் போர் நிறுத்தம் செய்ய புதின் மறுப்பு தெரிவித்தது, தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாக போப் லியோ வேதனை தெரிவித்துள்ளார். இருப்பினும், இன்னொரு முறை ரஷியாவுக்கு கோரிக்கை வைப்பேன் என்று கூறியுள்ள அவர், கிறிஸ்துமஸ்ஸில் உலகம் முழுவதும் அமைதியாக இருக்க வேண்டும் என்றார்
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். இதையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர்.
தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். 2×2 சீட்டிங் அமைப்புடன் 51 இருக்கைகள், பெரிய அளவிலான ஜன்னல்கள், சார்ஜிங் வசதி, பாதுகாப்பு அமைப்பு, கேமராக்கள், சென்சார் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.