சென்னை மெட்ரோ நிர்வாகம் எக்ஸ் வலைதளத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-06-2025
சென்னை மெட்ரோ நிர்வாகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கோயம்பேடு -அசோக் நகர் இடையே (பச்சை வழித்தடம்) மெட்ரோ ரெயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
கோயம்பேடு மற்றும் அசோக் நகர் பகுதிகளுக்கு இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் சென்னை சென்டிரல் இடையே நேரடி ரெயில் சேவையில் 24 நிமிட தாமதத்துடன் இயக்கப்படுகின்றன. எனினும், நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவைகள் அட்டவணைப்படி இயங்குகின்றன.
Update: 2025-06-25 03:58 GMT