பிரபலம் ஆகிவிட்டேன் என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடியாது - நடிகர் விஜய் ஆண்டனி
மதுரை செய்தியாளர்கள் சந்திப்பில் அரசியல் வரவு குறித்த கேள்விக்கு நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியதாவது:-
பிரபலம் ஆகிவிட்டேன் என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடியாது. எனக்கு அரசியல் அறிவு கிடையாது. 50 வயது ஆகிவிட்டது, இனிமேல் அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அரசியல் வடிவில் அதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை என்றார்.
Update: 2025-06-25 14:10 GMT