ரெயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் - போலீசார் விசாரணை
திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தை கடந்த போது கற்கள் வைக்கப்பட்டது தெரியவந்தது. ரெயில் சக்கரம் ஏறியதில் சிமெண்ட் கற்கள் உடைந்து சிதறியது. ரெயிலை கவிழ்க்க முயற்சியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை ஆவாரம்பாளையம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Update: 2025-08-25 05:33 GMT