இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-08-25 09:06 IST


Live Updates
2025-08-25 13:36 GMT

கிட்னி விற்பனை விவகாரம்; சிறப்புக் குழு அமைத்த ஐகோர்ட் கிளை

கிட்னி விற்பனை விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கிட்னி விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை அதிருப்தி தருகிறது. அரசு அளித்துள்ள அலுவலர்களின் பட்டியல் நீதிமன்றத்திற்கு நம்பிக்கையை அளிக்கவில்லை. குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகள், உள்கட்டமைப்பு வசதிகளை டிஜிபி செய்து தர வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

2025-08-25 12:55 GMT

சென்னை மயிலாப்பூரில் நாளை நடைபெறும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சென்னை வருகை

2025-08-25 12:49 GMT

சர்வதேச விண்வெளி நிலையம் சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் சந்திப்பு

2025-08-25 12:26 GMT
  • சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னீர் குப்பத்தில் விநாயகர் சதுர்த்திக்காக கோயில் அருகே பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
  • 4 பேர் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், மேலே சென்ற மின்சாரக் கம்பி மீது இரும்பு ராடு உரசியதில் மின்சாரம் பாய்ந்து பரத் (28) என்பவர் உயிரிழப்பு
  • ரஜினி (45), தென்னவன் (29) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
2025-08-25 12:16 GMT

மறைந்த தே.மு.தி.க நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக விஜயகாந்தை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.

2025-08-25 11:39 GMT

விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்ய அனுமதி

நாளை மறுநாள் (27-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, சிறியது முதல் பெரியது வரையிலான விநாயகர் சிலைகள் கடந்த 2 வாரங்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்பினரும், குடியிருப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் செய்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

2025-08-25 11:22 GMT
  • நல்லகண்ணுவின் உடல்நலன் குறித்து விசாரித்த விஜய்
  • உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு
  • நல்லகண்ணுவின் பேரனிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார் விஜய்
2025-08-25 10:37 GMT

பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 27-ந் தேதி தமிழகம் வருகை

இந்திய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 27-ந்தேதி (நாளை மறுநாள்) விநாயகர் சதுர்த்தி அன்று சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வர இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்