மனிதநேயத்தையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க தவறிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
மனிதநேயத்தையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க தவறிய மோடி அரசு - சோனியா காந்தி
மோடி மற்றும் நெதன்யாகு இடையிலான தனிப்பட்ட நட்பைக் கருத்தில்கொண்டு அரசு செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பாலஸ்தீன பிரச்னையில் மோடி அரசு மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க தவறிவிட்டது, ஆழ்ந்த மவுனம் காக்கிறது. இந்தியாவின் அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் நலன்களை விட, மோடி மற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான தனிப்பட்ட நட்பால், அரசின் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது” என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
Update: 2025-09-25 06:29 GMT