இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
2025-26 கல்வியாண்டில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் 2.65 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இணைந்து தொடங்கி வைத்தனர்.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சியில் கணித ஆசிரியராக வேண்டும் எனக் கூறிய மாணவியை உடனடியாக அழைத்து தனது பேனாவை அன்பளிப்பாக வழங்கினா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
"சினிமா துறை மிகவும் சவாலானது. இதில் சவால் வரும் போதெல்லாம் எனக்கு இருக்கும் ஒரே தைரியம் என் கிட்ட 2 டிகிரி இருக்கு. இங்க இருந்து அனுப்புனா கூட என்னால ஏதாவது வேலை செஞ்சி பொழச்சிக்க முடியும்ன்னு இருக்குறதுதான் என சிவகார்த்திகேயன் ’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பேசினார்.
எங்கிருந்தாலும் சாதிக்க முடியும் என தன்னம்பிக்கையோடு இருங்கள். தமிழ்நாடு அரசு உங்களுக்கு ஆதரவாக உள்ளது. அரசின் திட்டங்களை பயன்படுத்தி அனைவரும் சிறந்தவர்களாக ஆக வேண்டும். என்னை போல் கிராமப்புறங்களில் இருந்து பலர் வளர வேண்டும் என்பது என் ஆசை என கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறினார்.
கத்தாரில் உள்ள முக்கியமான சுற்றுலா இடங்களிலும், கத்தார் டூட்டி, பிரி கடைகளிலும் யுபிஐ மூலம் எளிதாக பணம் செலுத்தும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. என்.ஐ.பி.எல் நிறுவனம் கத்தார் தேசிய வங்கியுடன் சேர்ந்து கத்தாரில் கியூ ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிரசாரம் செய்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கொலை, கொள்ளை, பாலியல் தொந்தரவால் தமிழ்நாடு தலைகீழாக மாறிவிட்டது. போதைப்பொருளை கட்டுப்படுத்தியிருந்தால் இந்நிலை வந்திருக்காது என்றார்.
ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் 100 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.7 லட்சம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சுற்றுலா, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதால் வானில் பறக்கும் சுற்றுலா பயணிகள். இந்த நிலையில் நெல்லையில் தச்சநல்லூர் பகுதியில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை செப்டம்பர் 25, 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்து விடுமுறை தொடங்குவதால், துள்ளிக் குதித்து உற்சாகத்தை வெளிப்படுத்திய மாணவர்கள். வரும் அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
கௌதமன் இயக்கத்தில் வெளியான 'படையாண்டா மாவீரா' படத்தின் ஒரு காட்சியில் என் கணவர் வீரப்பன் தொடர்பான காட்சியும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இதுதொடர்பாக இயக்குநர் எந்தவித அனுமதியும் எங்களிடம் கேட்கவில்லை. படம் எடுக்கிறோம் என்கிற பெயரில், தங்களின் சுயலாபத்திற்காக என்னுடைய கணவர் பெயரை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.