கந்தசஷ்டி விழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வெள்ளைசாத்தி வீதி உலா

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கடந்த 22-ந் தேதி கந்தசஷ்டி விழா யாகசாலையுடன் தொடங்கியது. விழாவின் 3-வது நாளான நேற்று யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வெள்ளைசாத்தி அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

பின்னர் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் வள்ளி, தெய்வானைக்கு சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் சண்முகம் பட்டர் ஆகியோர் தலைமையில் ஆறுமுக லட்சார்ச்சனை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 27-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

Update: 2025-10-25 04:19 GMT

Linked news