இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-10-25 09:46 IST


Live Updates
2025-10-25 13:49 GMT

ஆந்திரத்தில் விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் லட்சுமய்யா பயணிகள் கதவு வழியாக குதித்து உயிர் தப்பியுள்ளார். குதித்த பிறகு, பயணிகள் உடைமைகள் வைக்கும் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கூடுதல் ஓட்டுநரை எழுப்பியிருக்கிறார். இதையடுத்து பயந்துபோன லட்சுமய்யா அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். பின்னர் வெள்ளிக்கிழமை பிற்பகலில் கர்னூலில் அவரை போலீஸார் கைது செய்தனர். அலட்சியம் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக லட்சுமைய்யா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே 4 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் பறிமுதல்.ஆந்திர மாநிலம், கா்னூல் அருகே ஹைதராபாதில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை மோதி தீப்பிடித்து எரிந்ததில் 2 குழந்தைகள் உள்பட 20 போ் உடல் கருகி உயிரிழந்தனா்

.உயிரிழந்தவா்கள் தெலங்கானா, ஆந்திரம், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்களாவா். பலியானவர்களில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்காய வியாபாரியின் மகனும் அடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..பேருந்தில் மளமளவென தீ பரவி, கொழுந்து விட்டு எரிந்து, அடா்புகையும் சூழ்ந்தது.சுதாரித்துக் கொண்ட சில பயணிகள், ஜன்னல் கண்ணாடியை உடைத்தும், அவசரகால கதவு வழியாகவும் வெளியே குதித்து, நூலிழையில் உயிா்தப்பினா்

2025-10-25 11:49 GMT

'தேசியத் தலைவர்' திரைப் படத்தை பொதுவெளியில் திரையிடப்படுவதற்கு முன்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து படத்தை திரையிடவும், விதிகளுக்கு உட்பட்டு சாதிய பிரச்சனைகளை தூண்டும் காட்சிகளை நீக்கவும் கோரிய வழக்கு.

திரைப்பட தணிக்கை வாரியம், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

2025-10-25 11:35 GMT

13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை தொடரும்.தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-10-25 10:12 GMT

சென்னையில் இருந்து 950 கி.மீட்டர் தொலைவில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 7 கிமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் சின்னம் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

2025-10-25 08:51 GMT

பாமக செயல் தலைவர் பதவி என்பது எதிர்பாராமல் கிடைத்தது. ராமதாஸின் கட்டளயை நிறைவேற்றுவேன் என்று காந்திமதி தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் காந்திமதிக்கு செயல் தலைவர் பதவி அளித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் மறுத்துள்ளார்.

2025-10-25 07:32 GMT

வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர்: சென்னை மாநகராட்சி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2025-10-25 07:29 GMT

அசாம் என்கவுன்ட்டர்: மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலம் கோல்ராஜ்ஹர் மாவட்டம் சலஹடி வனப்பகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டு துப்பாக்கி சூடு நடத்தினார்.

2025-10-25 07:09 GMT

ரென்ஷா அரைசதம்: இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. 

இதில் ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 236 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 

2025-10-25 06:28 GMT

மோன்தா புயல்; 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்துள்ளது. அதேவேளை, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி சென்னைக்கு தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாற்றியுள்ளது. இது வங்கக்கடலில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மறுதினம் புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ’மோன்தா புயல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்