பனிமூட்டம்: மின்சார ரெயில்கள் தாமதமாக... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 25-12-2025
பனிமூட்டம்: மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கம்
சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில், பனிமூட்டம் காரணமாக, சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்துக்கு வரும் ரெயில்கள் சற்று தாமதமாக வருகை தருகின்றன. பனிமூட்டம் காரணமாக கர்நாடகாவில் இருந்து வரும் மங்களூர் விரைவு ரெயில், அசோகபுரம் காவிரி விரைவு ரயில் காலதாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது.
அதேபோல, பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரெயில்களும்15 நிமிடம் காலதாமதமாக வருகின்றன. மேலும், அரக்கோணம்-சென்னை கடற்கரை, திருவள்ளூர்-பொன்னேரி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் பனிமூட்டத்தால் சற்று தாமதமாக வருகின்றன.
Update: 2025-12-25 04:48 GMT