இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 25-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-12-25 09:15 IST


Live Updates
2025-12-25 05:26 GMT

கர்நாடகாவின் ஹிரியூரில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

2025-12-25 05:21 GMT

விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவதில் திமுக அரசு அலட்சியம்: அன்புமணி குற்றச்சாட்டு

காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும், நவம்பர் மாதம் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில் அவற்றுக்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படாததைக் கண்டித்து கடந்த 23-ம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதைத் தொடர்ந்து மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு என்று வெளியான செய்திகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால், செய்திகளைப் படித்துப் பார்த்த போது தான் கடந்த ஆண்டு நவம்பர், திசம்பர் மாதங்களிலும், நடப்பாண்டின் ஜனவரி மாதத்திலும் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குத் தான் ரூ.289.63 கோடி நிவாரணம் வழங்குவதற்கு இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதுவும் எப்போது வழங்கப்படும் என்பது தெரியவில்லை.

நடப்பாண்டில் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்று வரை நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக இதுவரை மொத்தம் 5 முறை நான் அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். ஆனாலும், நிவாரணம் வழங்க அரசு தயாராக இல்லை. அதனால், நடப்பாண்டிற்கான இழப்பீடு அடுத்த ஆண்டு தான் கிடைக்குமோ? என்ற ஐயம் உழவர்கள் மத்தியியில் ஏற்பட்டுள்ளது.

2025-12-25 05:04 GMT

“அன்பு, அமைதி, சகோதரத்துவம் நிலைக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்தியில், அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில், உலகெங்கும், அன்பு-அமைதி-சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-12-25 04:53 GMT

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை... இன்றைய நிலவரம் என்ன...?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் 245-க்கும், கிலோவுக்கு ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை உயர்வுக்கு சோலார் தகடுகள் தயாரிப்பு, எலக்ட்ரிக் கார் தயாரிப்பு, 5ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், செமி கண்டக்டர் சிப்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதும், தேவைக்கும், வினியோகத்துக்கும் இடைவெளி ஏற்படுவதும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

2025-12-25 04:48 GMT

பனிமூட்டம்: மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கம்

சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில், பனிமூட்டம் காரணமாக, சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்துக்கு வரும் ரெயில்கள் சற்று தாமதமாக வருகை தருகின்றன. பனிமூட்டம் காரணமாக கர்நாடகாவில் இருந்து வரும் மங்களூர் விரைவு ரெயில், அசோகபுரம் காவிரி விரைவு ரயில் காலதாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது.

அதேபோல, பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரெயில்களும்15 நிமிடம் காலதாமதமாக வருகின்றன. மேலும், அரக்கோணம்-சென்னை கடற்கரை, திருவள்ளூர்-பொன்னேரி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் பனிமூட்டத்தால் சற்று தாமதமாக வருகின்றன.

2025-12-25 04:05 GMT

வலி இல்லாத ரெயில் கட்டண உயர்வு

பராமரிப்பு செலவு, இயக்க செலவு, விரிவாக்க செலவு, ஊழியர்களின் சம்பளம், பென்ஷன் ஆகியவற்றை கணக்கிட்டு பொதுமக்களால் தாங்கக்கூடிய அளவில் ரெயில் டிக்கெட் கட்டணம் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வருகிற வகையில் டிக்கெட் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு காசு வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறிப்பாக தினமும் பயணம் செய்யும் பயணிகளுக்கான சீசன் டிக்கெட் கட்டணம் மற்றும் மின்சார ரெயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

2025-12-25 03:59 GMT

மெட்ரோ ரெயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகள் உற்சகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முனிட்டு இன்று அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை நாளை (15-08-2025) பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.

நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”

2025-12-25 03:55 GMT

அதிகமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.. இன்றைய ராசிபலன் - 25.12.2025

மேஷம்

மார்கெட்டிங் பிரிவினர் முன்னேற்றம் காண்பர். உடல் நலம் தேறும். பிரிந்திருந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். மணிபர்சில் பண புழக்கம் அதிகரிக்கும். தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். கணவன் மனைவி உறவில் இனிமை கூடும். வெளியூர் பயணங்கள் நிகழும்.

அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்ச்

Tags:    

மேலும் செய்திகள்