தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை...... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 25-12-2025
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை... இன்றைய நிலவரம் என்ன...?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் 245-க்கும், கிலோவுக்கு ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை உயர்வுக்கு சோலார் தகடுகள் தயாரிப்பு, எலக்ட்ரிக் கார் தயாரிப்பு, 5ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், செமி கண்டக்டர் சிப்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதும், தேவைக்கும், வினியோகத்துக்கும் இடைவெளி ஏற்படுவதும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.
Update: 2025-12-25 04:53 GMT