பஹல்காம் தாக்குதல், இந்து - முஸ்லீம் மோதல் அல்ல -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
பஹல்காம் தாக்குதல், இந்து - முஸ்லீம் மோதல் அல்ல - காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்து முஸ்லீம் இடையேயான பிரச்னை கிடையாது. ஆனால் அதைத்தான் வெறுப்பாளர்கள் விரும்புகிறார்கள். அங்கு நடந்தது பயங்கரவாதத்துக்கும் மனிதநேயத்துக்குமான மோதல். ஒரு பெயரின் அடிப்படையில் யாரையும் பிரிக்க வேண்டாம்.
பிரிவினை எப்போதும் பயத்தையும் அதிக எதிர்ப்பு உணர்வையும் மட்டுமே உருவாக்கும். ஆனால் நாம் ஒரே இனம் என்ற உணர்வு இருக்க வேண்டும். நாம் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஒன்று பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Update: 2025-04-26 10:50 GMT