“தென்மாநில உணவுகள்தான் தேசிய உணவுகள்போல்..” -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
“தென்மாநில உணவுகள்தான் தேசிய உணவுகள்போல்..” - பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பேச்சு
சென்னையில் நடைபெற்ற காலை உணவுத் திட்ட விரிவாக்க விழாவில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பேசியதாவது:-
தென்மாநில உணவுகள்தான் தேசிய உணவுகள்போல் எங்கு பார்த்தாலும் கிடைக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் தென் மாநில உணவுகள் கிடைக்கின்றன. குறிப்பாக மசாலா தோசை, உப்புமா போன்ற உணவுகள் பஞ்சாப் மாநிலத்தில் அதிகம் கிடைக்கின்றன.
பஞ்சாபில் நாளை (ஆக.27) நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிப்போம். காலை உணவுத் திட்டத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையான உணவு வழங்குவது என்பது அசாத்தியாமானது. முதல்-அமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுகள்.
பஞ்சாப்பில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் வர வேண்டும். பஞ்சாப் என்பது வீரமரணம் அடைந்தவர்களின் மண். அதைப் பார்க்க அவசியம் வர வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.