ஆம்பூர் கலவர வழக்கு: நாளை மறுதினம் தீர்ப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
ஆம்பூர் கலவர வழக்கு: நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் - திருப்பத்தூர் கோர்ட்டு அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 2015ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் கைதான தமிழ் பாஷா என்பவர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட அது கலவரமாக மாறி, பேருந்துகள் உடைக்கப்பட்டு, போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன
இந்த கலவர வழக்கில் 191 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மாவட்ட கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க இருந்தது. முன்னெச்சரிக்கையாக கோர்ட்டு வளாகம் முழுவதும் சுமார் 1,000 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு நாளை மறுதினம் (ஆக., 28-ம் தேதி ) வழங்கப்படும் என திருப்பத்தூர் கோர்ட்டு அறிவித்துள்ளது.
Update: 2025-08-26 05:55 GMT