கோவை: 2 டன் எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
கோவை: 2 டன் எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு
சட்டவிரோதமாக கேரளாவிற்கு சேலத்திலிருந்து கோவை வழியே கொண்டு செல்லப்பட்ட, 2 டன் 15,000 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் இருந்து கோவை வழியே கேரள மாநிலம் மலப்புரத்திற்கு கடத்த முயற்சி நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-08-26 06:00 GMT