ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடியதற்கு மன்னிப்பு கேட்டார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடியதற்கு மன்னிப்பு கேட்டார் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார்
கர்நாடக சட்டமன்றத்தில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாடலைப் பாடியதற்கு அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “காங்கிரஸ்காரனாகப் பிறந்த நான், ஒரு காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். ஆர்.எஸ்.எஸ்.-ஐ புகழ்வது எனது நோக்கமல்ல. காந்தி குடும்பம்தான் எனது கடவுள்” என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-08-26 08:26 GMT