சென்னையில் உலகக் கோப்பை ஸ்குவாஷ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025

சென்னையில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி 


இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளம் சார்பில், தமிழக அரசு ஆதரவுடன் 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மற்றும் நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் எகிப்து, இந்தியா, ஈரான், ஜப்பான், மலேசியா, தென்கொரியா, ஹாங்காங், சீனா, தென்ஆப்பிரிக்கா, போலந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

Update: 2025-11-26 03:25 GMT

Linked news