இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
யாவில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அகமதாபாத் நகரில் காமன்வெல்த் போட்டியை நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் காமன்வெல்த் போட்டி நடைபெற உள்ளது.
நீலகிரியில் கட்டடம் கட்ட லோகநாதன் என்பவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உதகை நகராட்சி ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு சட்டங்கள், விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மலைப்பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும் எனவும் மலைப்பகுதியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த, தலைமை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்திய, குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த முருகன், மதுரையை சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சட்டவிரோதமாக குட்கா பொருட்களை சப்ளை செய்து வந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
நான் தொடர வேண்டுமா அல்லது என்னை நீக்க வேண்டுமா என்பதை பிசிசிஐ தான் முடிவு செய்யும். எனது பயிற்சியின்கீழ் இந்திய அணி வென்றதை தொடர்ந்து மறந்துவிடுகின்றனர். இங்கிலாந்தில் இளம் அணியை வைத்துதான் தொடரை சமன் செய்தேன்.
நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனதை குறிப்பிடுபவர்கள் அதே அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி வென்றதை குறிப்பிடுவதில்லை.
இப்போதைய இந்திய அணி அதிகம் அனுபவம் இல்லாத இளம் வீரர்களைக் கொண்ட அணி. வரும் நாட்களில் அணியில் இருக்கும் பிரச்சினைகள் சரிசெய்யப்படும். ஓர் அணியாக இணைந்து வென்றோம், ஓர் அணியாக தோல்வி அடைந்துள்ளோம், தனிப்பட்ட நபரை விமர்சிப்பது சரியல்ல என பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சோமங்கலம் காவல் நிலையங்கள் இடையேயான எல்லையில் இருப்பதால், யார் லாரியை அகற்றுவது? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது? என்ற பிரச்னை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 38 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சேலம் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சங்கர் (37) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சங்கர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பெண் விவகாரத்தில் ஒருவரைத் தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் 2 கோடிக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை நீக்கியது மத்திய அரசு. இந்திய தலைமைப் பதிவாளர், மாநில அரசுகளிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், 'myAadhaar' போர்டல் வழியாக இறந்தவர்களின் விவரங்களை குடும்ப உறுப்பினர்கள் தெரியப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக, காணொலிக் காட்சி வாயிலாக வழக்குகளை விசாரிப்பது குறித்து, ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறியுள்ளார். காலையில் சென்ற நடைபயிற்சியால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது, நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி கூற, பல வழக்கறிஞர்களும் தலைநகரில் நிலவும் காற்று மாசுபாட்டை தலைமை நீதிபதி அமர்வில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஹாங்காங்கில் 31 தளங்கள்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
புனே மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம்கட்ட விரிவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ரூ.7,280 கோடி மதிப்பில் அரியவகை காந்தம் உற்பத்தி திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் மராட்டியம், குஜராத்தில் பல தண்டவாளங்கள் கொண்ட ரெயில்வே திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.