தமிழ்நாட்டில் லிச்சி பழம் சாகுபடி - பிரதமர் மோடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
தமிழ்நாட்டில் லிச்சி பழம் சாகுபடி - பிரதமர் மோடி பெருமிதம்
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
லிச்சி பழம் பிகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்டில் தான் விளையும் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் லிச்சி பழ சாகுபடி, தற்போது தென்னிந்தியா மற்றும் ராஜஸ்தானிலும் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வீர அரசு காபி பயிர் விவசாயம் செய்து வந்தார். அவர் கொடைக்கானலில் லிச்சி மரங்களை நட்டார், அவருடைய ஏழாண்டு கால உழைப்பிற்குப் பிறகு தற்போது, இந்த மரங்களால் மகசூல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
லிச்சி பழங்களைப் பயிர் செய்வதில் இவருக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து, மற்ற விவசாயிகளும் உத்வேகம் அடைந்தார்கள். ராஜஸ்தானத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் ராணாவத்தும் லிச்சி பழங்களைப் பயிர் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் உத்வேகம் அளிக்க வல்லவை. நாம் புதியதாக ஒன்றைச் செய்யும் நோக்கத்தை மேற்கொண்டால், இடர்களைத் தாண்டியும் உறுதிப்பாட்டோடு நின்றால், சாத்தியமற்றதைக் கூட சாத்தியமாக்க முடியும் என்று கூறினார்.