பீகார் தேர்தல் தேதி அடுத்த வாரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025
பீகார் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நிதிஷ்குமாரின் அரசின் பதவி காலம் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது.
இதையடுத்து, 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 22-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன்படி, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தேர்தல் மேற்கொண்டது.
Update: 2025-09-27 05:54 GMT