சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை; தாம்பரத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை; தாம்பரத்தில் போக்குவரத்து பாதிப்பு
புயல் மற்றும் பருவமழையை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், கிண்டி மற்றும் வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து வருகிறது.
இதேபோன்று, கனமழையால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Update: 2025-10-27 04:41 GMT