இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-10-27 09:31 IST


Live Updates
2025-10-27 13:56 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் ரூ.239 கோடி பணத்தை லாட்டரியில் வென்றுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த அனில் குமார் (29) AED 100 மில்லியன் லாட்டரியை வென்ற முதல் அதிர்ஷ்டசாலி இவர் என கூறப்படுகிறது.

2025-10-27 13:48 GMT

சென்னைக்கு கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவில், காக்கிநாடாவிலிருந்து 490 கி.மீ தென்மேற்கு திசையில் மோந்தா புயல் நிலை கொண்டுள்ளது. நாளை தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

2025-10-27 13:19 GMT

உலக அரங்கில் தமிழகத்தின் பெருமையை உயர்த்தும் வகையில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கண்ணகி நகரைச் சேர்ந்த சகோதரி கார்த்திகாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

2025-10-27 12:28 GMT

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை அதிமுக வரவேற்கிறது. சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை ஆணையம் முறையாக வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். பணிகளை மாநில அரசு ஊழியர்களே செய்வார்கள் என்பதால் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். வரும் தேர்தலில் தோல்வியை அறிந்ததால் காரணம் தேடுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

2025-10-27 12:08 GMT

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்.. சூரனை ஆட்கொண்ட முருகப்பெருமான்

திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருக்க, சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்து ஆட்கொண்டார். அவனை தனது வாகனமான மயிலாகவும், சேவற்கொடியாகவும் ஏற்றுக்கொண்டார். சூரசம்ஹார நிகழ்வை கண்டு மெய்சிலித்த பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.

2025-10-27 12:02 GMT

சூரசம்ஹார உற்சவம் கோலாகலம்.. திருச்செந்தூர் கடற்கரையில் அலைகடலென திரண்ட பக்தர்கள்

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

2025-10-27 11:59 GMT

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்... முருகப்பெருமானுடன் போர்புரிய வந்த சூரன்

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் தாரகாசுரன் மற்றும் சிங்கமுகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்ததையடுத்து, இறுதியாக சூரபத்மன் போர்க்களத்தில் முருகப்பெருமானை சந்திக்க வந்தான். 

2025-10-27 11:57 GMT

அந்தமான் 7 நிக்கோபார்

சட்டீஸ்கார்

கோவா

குஜராத்

கேரளா

லட்ச்சத்தீவு

மத்திய பிரதேசம்

புதுச்சேரி

ராஜஸ்தான்

தமிழ்நாடு

உத்திர பிரதேசம்

மேற்கு வங்காளம்

2025-10-27 11:53 GMT

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணிக்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று (அக்.27) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

2025-10-27 11:51 GMT

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்... சிங்கமுகாசுரனை வதம் செய்த முருகப்பெருமான்

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் தாரகாசுரனைத் தொடர்ந்து சிங்கமுகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். முருகப்பெருமானின் ஆயுதம், சிங்கமுகாசுரனின் தலையை கொய்தது. இந்நிகழ்வை கண்டு மெய்சிலிர்த்த பக்தர்கள், ’அரோகரா’ முழக்கமிட்டு முருகப்பெருமானை வணங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்