ரெயிலில் அனுப்புவதில் தாமதம்: மழையில் நனைந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
ரெயிலில் அனுப்புவதில் தாமதம்: மழையில் நனைந்து லாரிகளிலேயே முளைத்த நெல் மூட்டைகள் - அன்புமணி கண்டனம்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
வெளிமாவட்டங்களில் உள்ள அரிசி அரவை ஆலைகளுக்கு ரெயில்களில் ஏற்றி அனுப்புவதற்காக கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வரப்பட்ட 36 ஆயிரம் நெல் மூட்டைகள் இன்னும் அனுப்பி வைக்கப்படாததால், கடந்த 10 நாள்களாக பெய்த மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்கும் விஷயத்தில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்து உள்ளார்.
Update: 2025-10-27 08:35 GMT