மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்..... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025
மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்.. தரைமட்டமான கட்டிடங்கள்
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான மலேசியா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. இதனால் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டிடங்கள் இடிந்த விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
Update: 2025-03-28 07:29 GMT