இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 163 பேர் உயிரிழந்தகவும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மகா கும்பமேளாவுக்காக 17,300க்கும் அதிகமான ரெயில் சேவை இயக்கப்பட்டன. இதில், 7484 சிறப்பு ரயில்களும், 996 நீண்ட தூர ரயில்களும் அடங்கும். இவற்றில் சுமார் 4.24 கோடி பேர் பயணித்துள்ளனர். மக்களவையில் ரெயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி, திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயங்கும் தனியார் பேருந்துகளில் இருந்து அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்த போக்குவரத்துப் போலீசார், தலா ரூ.10,000 அபராதம் விதித்தனர்.
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 100 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மகனை இழந்துவாடும் பாரதிராஜாவிற்கு ஆறுதல் கூறினார் விசிக தலைவர் திருமாவளவன். நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதி மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.
சிவசேனா கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதாக நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா விமர்சித்து இருந்தார். ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்து பேசிய வழக்கில் நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. அடுத்துதடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மியன்மார்,தாய்லாந்து சின்னமின்னமான முறையில் காட்சி அளிக்கிறது. காணும் இடமெங்கும் இடிபாடுகள், பலர் சிக்கியிருக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளடு. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசின் நிலைக்குழுவுக்கான மூத்த வழக்கறிஞராக டாக்டர். வி.வெங்கடேசன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு. மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து விசாரணையை தொடர சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.