செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்துவைத்தது
அமைச்சர் பதவி விலகல் தொடர்பான கவர்னர் மாளிகையின் செய்திக்குறிப்பை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்களை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. அந்த வகையில், புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கத் தேவையில்லை என்று நீதிபதிகள் கூறினர்.
வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் எந்த அரசுப் பதவியும் ஏற்கக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகலாம். அதற்காக, எந்த பதவியும் வகிக்க முடியாது என உத்தரவிட முடியாது என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
Update: 2025-04-28 09:58 GMT