அவமான ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி - மு.க.ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025

அவமான ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி - மு.க.ஸ்டாலின் சாடல்

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திமுக ஆட்சியில் எந்த வழக்காக இருந்தாலும் விரைந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறப்பான ஆட்சியை எதிர்க்கட்சி தலைவர் குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை. கடந்த 4 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளன.

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி; அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி. சாமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு சாத்தான்குளமே சாட்சி; துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி; ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள தமிழகத்தின் உரிமைகளை அடகுவைத்த ஆட்சி அதிமுக. சட்டம்-ஒழுங்கை பற்றி பேச அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2025-04-28 09:59 GMT

Linked news