ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவின் மனைவிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-05-2025

ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவின் மனைவிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தேஜஸ்வியின் குழந்தையையும் மற்றும் குடும்பத்தினரையும் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு நேரில் சென்று அவர்களை வாழ்த்தினார்.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ், அவருடைய பேரனுக்கு இராஜ் என இன்று பெயர் சூட்டியுள்ளார். எங்களுடைய பேத்தி காத்யாயனிக்கு சிறிய சகோதரன் பிறந்திருக்கிறான். அவனுக்கு நானும், ராப்ரி தேவியும் இராஜ் என பெயர் சூட்டியிருக்கிறோம் என எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.

Update: 2025-05-28 13:24 GMT

Linked news