இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-05-28 09:09 IST


Live Updates
2025-05-28 14:28 GMT

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி விடுமுறை நிறைவையொட்டியும், , வார இறுதி விடுமுறையை கருத்தில் கொண்டும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 30, 31-ம் தேதிகளில் 2 ஆயிரத்து 510     என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பஸ்களில் இதுவரை 26 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2025-05-28 14:20 GMT

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-05-28 13:24 GMT

ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவின் மனைவிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தேஜஸ்வியின் குழந்தையையும் மற்றும் குடும்பத்தினரையும் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு நேரில் சென்று அவர்களை வாழ்த்தினார்.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ், அவருடைய பேரனுக்கு இராஜ் என இன்று பெயர் சூட்டியுள்ளார். எங்களுடைய பேத்தி காத்யாயனிக்கு சிறிய சகோதரன் பிறந்திருக்கிறான். அவனுக்கு நானும், ராப்ரி தேவியும் இராஜ் என பெயர் சூட்டியிருக்கிறோம் என எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.

2025-05-28 12:46 GMT

தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது எனும் கருத்தில் மன்னிப்புக்கு இடம் இல்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார். அன்பு மன்னிப்பு கேட்காது என கூறிய அவர், இது பதில் அல்ல. விளக்கம் என்றும் கூறியுள்ளார்.

2025-05-28 12:22 GMT

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் இன்று கூடியது. இதில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 2-வது தீர்மானத்தில், மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசன் அவர்களுக்கு தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2025-05-28 11:35 GMT

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கடலூர், கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-05-28 11:02 GMT

தென் கொரியாவில் தொடங்கி நடந்து வரும் ஆசிய தடகள போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு இன்று தங்க பதக்கம் கிடைத்து உள்ளது.

2025-05-28 10:55 GMT

ஆசிய தடகள போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெள்ளி வென்றுள்ளார்.

2025-05-28 10:35 GMT

"தக் லைப்" இசைவெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் பேச்சை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

2025-05-28 10:33 GMT

தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை மொழியியல் வல்லுநர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். கன்னடம், மலையாளம் பேசுவோர் அந்த உண்மையை ஏற்க தயங்கலாம். ஆனால் வரலாறு இதுதான் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்