இந்தியாவுக்கு எதிராக வரி ; அமெரிக்க பொருட்களை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
இந்தியாவுக்கு எதிராக வரி ; அமெரிக்க பொருட்களை ஆன்லைனில் வாங்கக்கூடாது; எச்.ராஜா
ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து முன்னணி சார்பில் நேற்று விநாயகர் சதுர்த்தி சிலைகள் ஊர்வலம் நடந்தது. இதில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், “அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதம் வரி விதித்த பாரபட்சமான நடவடிக்கை இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்குகிறது. ஒரு பொருளாதார நடவடிக்கைக்கு அடி கொடுப்பது என்பது மற்றொரு பொருளாதார நடவடிக்கை மூலமாக மட்டுமே கொடுக்க வேண்டும். அமெரிக்காவின் பொருளாதார பாரபட்ச நடவடிக்கைக்கு ஒவ்வொரு இந்திய மக்களும் பதிலடி கொடுக்க வேண்டும். சுதேசி உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டும். ஆன்லைனில் அமெரிக்கா பொருட்களை இந்திய மக்கள் வாங்க கூடாது” என்று தெரிவித்தார்.
Update: 2025-08-28 04:40 GMT