தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்: பிரசாந்த் கிஷோர் தாக்கு


முதல்வர் மு.க. ஸ்டாலினின் பீகார் பயணத்தை, தேர்தல் வியூக நிபுணரும் ஜனசுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் கூறுகையில், "தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுகிறார்கள், இழிவுபடுத்தப்படுகிறார்கள். அப்போது ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை; 'கூலி வேலை செய்வது பீகாரிகள் மரபணுவில் உள்ளது' என்று ரேவந்த் ரெட்டி பேசினார். அவரை காங்கிரஸ் கவுரவிக்கிறது. பீகாரிகளை அவமதிப்பவர்களை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது" என்று விமர்சித்துள்ளார்.


Update: 2025-08-28 04:44 GMT

Linked news