அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்
ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான 2023-24 நிதியாண்டுக்கான வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு (ASI) முடிவுகளை மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டது
அதில் அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2வது இடத்தில் குஜராத், 3வது இடத்தில் மகாராஷ்டிரா, 4வது இடத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் 5வது இடத்தில் கர்நாடகா மாநிலமும் இடம்பெற்றுள்ளன.
இதன்படி நாட்டின் வேலைவாய்ப்புகளில் மாநிலங்களின் பங்களிப்பில் தமிழ்நாடு 15 சதவீதம் பங்கைக் கொடுத்துள்ளது என்றும், குஜராத் (13%), மகாராஷ்டிரா (13%), உத்தரப்பிரதேசம் (8%) மற்றும் கர்நாடகா (6%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.