கூட்ட நெரிசலை தவிர்க்க சேலம் வழியாக சிறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
கூட்ட நெரிசலை தவிர்க்க சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் கண்ணூர் ஒரு வழிப்பாதை சிறப்பு ரெயில் (06009) இயக்கப்படும் இந்த ரெயில் இன்று (வியாழக்கிழமை) சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு திருவள்ளுவர். அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 5.05 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-28 06:30 GMT