புதின், கிம் ஜாங் உன் உள்பட 26 வெளிநாட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

புதின், கிம் ஜாங் உன் உள்பட 26 வெளிநாட்டு தலைவர்கள் அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம்


சீனாவில் நடைபெற உள்ள வெற்றி தினப் பேரணி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். சீன தலைநகர் பெய்ஜிங்கில் செப்டம்பர் 3-ஆம் தேதி இந்த வெற்றி தினப் பேரணி கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்த பேரணி அணிவகுப்பு நிகழ்ச்சிகளின் போது சீனாவின் நவீன ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில், அதிநவீன ஆயுதங்களின் அணிவகுப்பும் நடத்தப்பட உள்ளது.


Update: 2025-08-28 06:33 GMT

Linked news