முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து
திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏழு ஆண்டுகள் நிறைவு செய்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும் தன் உயிரெனக் காத்து, விட்டுச் சென்ற மாபெரும் பொறுப்பை ஏற்று நடத்திவரும் அண்ணன் தளபதி அவர்களின் பணிகள் யாவும் ஜனநாயகவாதிகள் அனைவருக்கும் எழுச்சியூட்டுகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
Update: 2025-08-28 07:39 GMT