முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரருக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரருக்கு விதித்த நிபந்தனைகள் மாற்றியமைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இருதய சிகிச்சை மேற்கொள்ள அசோக்குமார் அமெரிக்கா செல்ல நிபந்தனைகளுடன் ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. ஏற்கனவே அனுமதி அளித்த உத்தரவை மாற்றியமைக்கக்கோரி அசோக்குமார் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அசோக்குமார் தரப்பில், “அமெரிக்காவுக்கு தன்னுடன் தனது மனைவிக்கு பதிலாக மகள் வரவுள்ளார் என்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நேரில் தகவல் தெரிவிப்பதற்கு பதில் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-28 07:58 GMT

Linked news