தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக நல்லகண்ணு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2025-08-28 11:15 GMT

Linked news