கோவாவில் உலகக் கோப்பை செஸ் தொடர் - அக்டோபர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
கோவாவில் உலகக் கோப்பை செஸ் தொடர் - அக்டோபர் 30-ந்தேதி தொடங்குகிறது
செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 27 வரை இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது. ஆனால் போட்டி எந்த நகரத்தில் நடத்தப்படும் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் செஸ் உலகக் கோப்பை தொடர் கோவாவில் வரும் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் என ஃபிடே அறிவித்துள்ளது.
Update: 2025-08-28 12:50 GMT