அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
மதுரை அழகர் கோவில் வளாகத்திற்குள், உபரி நிதியில் கட்டப்படும் வணிக கட்டுமானங்களுக்கு தடை விதிக்கக் கோரி நாகையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அதே சமயம், கோவில் நிதியில் கட்டப்படும் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மற்ற கட்டுமானங்கள் மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என உறுதி தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
Update: 2025-08-28 13:07 GMT