தீண்டாமை வன்கொடுமை:பெண் உள்பட ஆறு பேருக்கு 2 ஆண்டு சிறை
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசு பள்ளி சமையலர் பாப்பாள் மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமை வன்கொடுமை தொடர்பான வழக்கில் பெண் உள்பட ஆறு பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பழனிசாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளியங்கிரி, துரைசாமி மற்றும் சீதாலட்சுமி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்த பாப்பாள் சமையலராக பணியாற்ற விடாமல் தடுத்ததாக 2018ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. பள்ளியில் சமையலராக பாப்பாள் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆதிக்க சாதியினர் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்தனர்.
Update: 2025-11-28 10:36 GMT