தமிழ்நாட்டில் 47 சதவீத உயர்கல்வி மாணவர் சேர்க்கை -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
தமிழ்நாட்டில் 47 சதவீத உயர்கல்வி மாணவர் சேர்க்கை - முல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “உயர்நிலைப் பள்ளி சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 47 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடுநிலைப் பள்ளியில் இடைநிற்றலே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளோம்.
இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே 13.2 சதவீதம் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் வெறும் 1.4 சதவீதம் தான். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக டாக்டர்கள், மருத்துவ மாணவர் இடங்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்” என்று அவர் கூறினார்.
Update: 2025-04-29 05:13 GMT