நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025

நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - பிரதமருக்கு ராகுல், கார்கே கடிதம்


நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் சீற்றப்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றாக நிற்போம் என்பதை இந்தியா காட்ட வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி எதிர்பார்க்கிறது. அங்கு மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஒற்றுமையையும் உறுதியையும் காட்ட முடியும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

Update: 2025-04-29 06:36 GMT

Linked news