வேகமெடுக்கும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.76... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
வேகமெடுக்கும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை நெருங்குகிறது - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து வேகமெடுத்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 470-க் கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே வேகத்தில் தங்கம் விலை உயரும்பட்சத்தில், இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு சவரன் ரூ. 76 ஆயிரத்தை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.131-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Update: 2025-08-29 04:23 GMT